இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1151ஸஹீஹுல் புகாரி
قَالَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنِ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَتْ عِنْدِي امْرَأَةٌ مِنْ بَنِي أَسَدٍ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ مَنْ هَذِهِ ‏"‏‏.‏ قُلْتُ فُلاَنَةُ لاَ تَنَامُ بِاللَّيْلِ‏.‏ فَذُكِرَ مِنْ صَلاَتِهَا فَقَالَ ‏"‏ مَهْ عَلَيْكُمْ مَا تُطِيقُونَ مِنَ الأَعْمَالِ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا ‏"‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

பனீ அஸத் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்னிடம் இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள். நான், “இவர் இன்னார். இவர் இரவில் உறங்குவதில்லை” என்று கூறி, அவரது தொழுகையைப் பற்றிக் குறிப்பிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதும் (இதை நிறுத்துங்கள்)! உங்களால் இயன்ற (நல்ல) செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح