அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு தையல்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்தார்.
ஸாபித் அவர்கள் கூடுதலாகக் கூறியதாவது:
நான் அனஸ் (ரழி) அவர்கள், "அதன்பிறகு எனக்காகத் தயாரிக்கப்பட்ட உணவில் பூசணிக்காயைச் சேர்த்துச் சமைக்க என்னால் இயலுமானால், அவ்வாறு சமைக்கப்படாமல் இருந்ததில்லை" என்று கூறுவதைக் கேட்டேன்.