உஸ்மான் (ரலி) அவர்கள் உளூச் செய்த பிறகு கூறினார்கள்:
"நான் உங்களுக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கட்டுமா? ஒரு (குர்ஆன்) வசனம் மட்டும் இல்லாதிருந்தால், நான் உங்களுக்கு அதனை அறிவித்திருக்க மாட்டேன். நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்: ‘எந்த ஒரு மனிதரும் உளூச் செய்து, தன் உளூவை அழகிய முறையில் நிறைவேற்றி, பிறகு தொழுகையைத் தொழுதால், அந்தத் தொழுகைக்கும் அடுத்த தொழுகைக்கும் இடைப்பட்ட (சிறு) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன - அவர் (அடுத்த தொழுகையை) தொழும் வரை.’"
உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "(உஸ்மான் (ரலி) குறிப்பிட்ட) அந்த வசனம்: ‘இன்னல்லதீன யக்தூமூன மா அன்ஸல்னா மினல் பய்யினாதி...’ (அதாவது, 'நாம் இறக்கிய தெளிவான அத்தாட்சிகளை மறைப்பவர்கள்...') என்பதாகும்."