ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜனாபத் எனும்) கடமையான குளிப்பைக் குளிக்கும்போது, பாத்திரத்தில் தமது கையை நுழைப்பதற்கு முன்பாக, பாத்திரத்திலிருந்து (தண்ணீரை ஊற்றி) தமது இரு கைகளையும் கழுவுவதிலிருந்து தொடங்குவார்கள். பின்னர், தொழுகைக்குச் செய்யும் அங்கசுத்தியை (உளூவை)ப் போன்று அங்கசுத்தி செய்வார்கள்.