ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷா தொழுகையைத் தொழுவார்கள். பிறகு தம் சமூகத்தாரிடம் சென்று, அதே தொழுகையை (இமாமாக நின்று) அவர்களுக்குத் தொழுவிப்பார்கள் (அதாவது, முஆத் (ரழி) அவர்களுக்கு அது உபரியான தொழுகையாகவும், சமூகத்தாருக்கு கடமையான தொழுகையாகவும் இருந்தது).