حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (உலகில் தோன்றிய சமூகங்களில்) கடைசியானவர்கள்; மறுமை நாளில் (நன்மைகளிலும், சுவனப் பிரவேசத்திலும்) முந்தியவர்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகில்) கடைசியாக வந்த நாம், மறுமை நாளில் முந்தியவர்கள் ஆவோம். எனினும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டது; நமக்கு அவர்களுக்குப் பின்பே அது வழங்கப்பட்டது. அல்லாஹ் நம் மீது விதியாக்கியதும், அவன் நம்மை அதன் பால் வழிகாட்டியதும் இந்த நாளையே (வெள்ளிக்கிழமையே) ஆகும். எனவே, மக்கள் இதில் நம்மைப் பின்தொடர்கின்றனர்; யூதர்கள் (வெள்ளிக்கிழமைக்கு) அடுத்த நாளையும் (சனிக்கிழமை), கிறிஸ்தவர்கள் அதற்கு அடுத்த நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) (தங்கள் சிறப்பு நாளாகக்) கொண்டனர்.