حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ صَلَّى قَبْلَ الْخُطْبَةِ ثُمَّ خَطَبَ فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَأَتَاهُنَّ فَذَكَّرَهُنَّ وَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ وَبِلاَلٌ قَائِلٌ بِيَدَيْهِ هَكَذَا فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْخُرْصَ وَالْخَاتَمَ وَالشَّىْءَ .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள்) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள்; பின்னர் உரையாற்றினார்கள் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன். (தமது உரையை) பெண்கள் செவியேற்கவில்லை என்று அவர்கள் கருதியதால், அப்பெண்களிடம் சென்று, அவர்களுக்கு (இறைவனை) நினைவூட்டி, அறிவுரை கூறி, தர்மம் செய்யுமாறு ஏவினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது கைகளை இவ்வாறு (தர்மத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக) விரித்துக் கொண்டிருக்க, பெண்கள் தங்களின் காதணிகளையும், மோதிரங்களையும், மற்றும் (மற்ற) பொருட்களையும் போடத் தொடங்கினார்கள்.