அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் குடும்பத்தாருக்காக (அல்லாஹ்விடம்) நற்கூலியை நாடியவராகச் செலவிட்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகும்."
அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தன் குடும்பத்திற்காக (ஏதேனும்) செலவு செய்து, அதை அல்லாஹ்வின் வெகுமதியை நாடிச் செய்தால், அது அவருக்கு தர்மமாக (ஸதகாவாக) அமையும்.
அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தன் குடும்பத்தாருக்காகச் செலவு செய்து, அதற்கான நற்கூலியை (அல்லாஹ்விடம்) எதிர்பார்த்தால், அது அவருக்கு ஒரு தர்மமாகும்.