இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2613ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَتْ قُرَيْشٌ تَصُومُ عَاشُورَاءَ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ فَلَمَّا هَاجَرَ إِلَى الْمَدِينَةِ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ شَهْرُ رَمَضَانَ قَالَ ‏ ‏ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அறியாமைக் காலத்தில் குறைஷிகள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்றதுடன் (மக்களுக்கும்) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டபோது அவர்கள் (ஸல்), "யார் (இந்த நோன்பை) நோற்க விரும்புகிறாரோ அவர் நோற்கலாம்; யார் அதனை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் விட்டுவிடலாம்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2443சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ عَاشُورَاءُ يَوْمًا نَصُومُهُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ هَذَا يَوْمٌ مِنْ أَيَّامِ اللَّهِ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘ஆஷூரா (நாள்) என்பது அறியாமைக் காலத்தில் நாங்கள் நோன்பு நோற்கும் ஒரு நாளாக இருந்தது. ரமளான் (நோன்பு) கடமையாக்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இது அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள். எனவே, விரும்பியவர் அதில் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் அதை விட்டுவிடலாம்.’
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)