ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைக் குறித்து அறிவிக்கிறார்கள்:
"நாங்கள் (இஹ்ராமிலிருந்து) விடுபட்டபோது பலிப்பிராணியை (ஹத்யு) அறுத்துப் பலியிடுமாறும், எங்களில் ஒரு குழுவினர் ஒரு பலிப்பிராணியில் (கூட்டாகப்) பங்குகொள்ளுமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (நபியவர்கள் தம்) தோழர்கள் தங்களின் ஹஜ்ஜின் (இஹ்ராமிலிருந்து) விடுபடுமாறு கட்டளையிட்டபோது இது நிகழ்ந்தது."
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)