இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

9507முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي يَحْيَى مَوْلَى جَعْدَةَ بْنِ هُبَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ عَابَ طَعَامًا قَطُّ كَانَ إِذَا اشْتَهَاهُ أَكَلَهُ وَإِذَا لَمْ يَشْتَهِهِ سَكَتَ
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதை நான் கண்டதில்லை. (அந்த உணவு) தமக்கு விருப்பமாக இருந்தால் அதை உண்பார்கள்; (அதில்) விருப்பம் இல்லாவிட்டால் (அதைப் பற்றி ஏதும் கூறாமல்) அமைதியாக இருந்து விடுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)
صحيح
10141முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَحْيَى وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى عَنْ سُفْيَانَ قَالَ يَحْيَى قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ عَنِ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا عَابَ رَسُولُ اللهِ ﷺ طَعَامًا قَطُّ كَانَ إِذَا اشْتَهَاهُ أَكَلَهُ وَإِذَا لَمْ يَشْتَهِهِ تَرَكَهُ
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. அவர்கள் (அந்த) உணவை விரும்பினால் அதை உண்பார்கள்; (அதை) விரும்பாவிட்டால் அதனை (குறை கூறாமல்) விட்டுவிடுவார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح
10421முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي يَحْيَى مَوْلَى جَعْدَةَ بْنِ هُبَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ عَابَ طَعَامًا قَطُّ كَانَ إِذَا اشْتَهَاهُ أَكَلَهُ وَإِذَا لَمْ يَشْتَهِهِ سَكَتَ
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தவொரு உணவையும் ஒருபோதும் குறை கூறியதை நான் பார்த்ததில்லை. (உண்ண வேண்டும் என்ற) விருப்பம் இருந்தால் அதை உண்பார்கள்; (உண்ண) விருப்பம் இல்லையென்றால் (அதைப் பற்றி ஏதும் கூறாமல்) அமைதியாக இருந்துவிடுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)
صحيح