அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள், ஆலு உத்தாரித் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது (ஒரு பட்டாடையைக்) கண்டார்கள். (மற்ற விவரங்கள்) யஹ்யா இப்னு ஸயீத் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளன. ஆனால், அதில் (நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம்), "நீர் இதன் மூலம் (விற்று அல்லது வேறு வழியில்) பயனடைவதற்காகவே இதை உமக்கு அனுப்பினேன்; நீர் இதை அணிந்துகொள்வதற்காக நான் இதை உமக்கு அனுப்பவில்லை" என்று கூறினார்கள்.