இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5432ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، - يَعْنُونَ ابْنَ عُلَيَّةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله
عليه وسلم بِهَذَا وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னர் கூறப்பட்ட) இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் 'முஹம்மது அல்லாஹ்வின் தூதர்' என்று குறிப்பிடப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4179சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ حَمَّادَ بْنَ زَيْدٍ، وَإِسْمَاعِيلَ بْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَاهُمْ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّزَعْفُرِ لِلرِّجَالِ وَقَالَ عَنْ إِسْمَاعِيلَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆண்கள் குங்குமப்பூவைப் பயன்படுத்துவதைத் தடை செய்தார்கள். இஸ்மாயீல் அவர்களின் அறிவிப்பில், "(தடை செய்தார்கள்) ஆண் குங்குமப்பூவைப் பயன்படுத்துவதை" என்று வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)