அவ்ஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அறியாமைக் காலத்தில் நாங்கள் (நோய்களுக்கும் தீய சக்திகளுக்கும்) ருக்யா ஓதி வந்தோம். (ஒருமுறை) நாங்கள் கேட்டோம்: அல்லாஹ்வின் தூதரே! இதைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள்: உங்கள் ருக்யாக்களை என்னிடம் முன்வையுங்கள். அவற்றில் இணைவைப்பு இல்லாத வரை ருக்யாக்களில் எந்தத் தீங்கும் இல்லை.