அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்) அவர்களின் ஹதீஸின் அதே கருத்தில் (மற்றொரு அறிவிப்பு) வந்துள்ளது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - قَالَ ابْنُ يَحْيَى كَتَبْتُهُ مِنْ كِتَابِهِ - أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ : إِنِّي أَرَى اللَّيْلَةَ فَذَكَرَ رُؤْيَا فَعَبَّرَهَا أَبُو بَكْرٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : " أَصَبْتَ بَعْضًا وَأَخْطَأْتَ بَعْضًا " . فَقَالَ : أَقْسَمْتُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ لَتُحَدِّثَنِّي مَا الَّذِي أَخْطَأْتُ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : " لاَ تُقْسِمْ " .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்து வந்தார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் நேற்றிரவு (ஒரு கனவு) கண்டேன்" என்று கூறி, ஒரு கனவை விவரித்தார். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அபூபக்கரே!) நீர் (கூறியதில்) ஒரு பகுதி சரியானது; ஒரு பகுதி தவறானது" என்று கூறினார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் எதில் தவறிழைத்தேன் என்பதைத் தாங்கள் எனக்கு அறிவிக்க வேண்டும் என்று தங்கள் மீது சத்தியமிட்டுக் கேட்கிறேன்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அவ்வாறு) சத்தியம் செய்யாதீர்" என்று கூறினார்கள்.