இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6183ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَعَبْدَةُ، قَالاَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ،
قَالَ قَالَتْ لِي عَائِشَةُ أَبَوَاكَ وَاللَّهِ مِنَ الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ
الْقَرْحُ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் மகன் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (உர்வா, உமது தந்தை ஸுபைர், உமது தாய்வழிப் பாட்டனார் அபூபக்ர் ஆகிய) உமது இரு தந்தையரும் 'தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பதிலளித்தவர்கள்' (எனும் 3:172ஆவது குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டவர்கள்) ஆவர்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
124சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَهَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ لِي عَائِشَةُ يَا عُرْوَةُ كَانَ أَبَوَاكَ مِنَ الَّذِينَ اسْتَجَابُوا لِلَّهِ وَالرَّسُولِ مِنْ بَعْدِ مَا أَصَابَهُمُ الْقَرْحُ أَبُو بَكْرٍ وَالزُّبَيْرُ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் என்னிடம் (உர்வாவிடம்) கூறினார்கள்: "உர்வாவே! உன்னுடைய இரு தந்தையரும் (உன்னுடைய தந்தை ஸுபைர் (ரழி) மற்றும் தாய்வழித் தாத்தா அபூபக்ர் (ரழி)), (உஹத் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்களின் அழைப்பிற்கு) செவிசாய்த்தவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள். (அவர்கள்) அபூபக்ர் (ரழி) அவர்களும் ஸுபைர் (ரழி) அவர்களும் ஆவார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)