இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3082ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، وَحُمَيْدُ بْنُ الأَسْوَدِ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ ابْنُ الزُّبَيْرِ لاِبْنِ جَعْفَرٍ ـ رضى الله عنهم أَتَذْكُرُ إِذْ تَلَقَّيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَأَنْتَ وَابْنُ عَبَّاسٍ قَالَ نَعَمْ، فَحَمَلَنَا وَتَرَكَكَ‏.‏
இப்னு அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் இப்னு ஜஃபர் (ரலி) அவர்களிடம், "நானும், நீங்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா?" என்று கேட்டார்கள்.
அதற்கு இப்னு ஜஃபர் (ரலி) அவர்கள், "ஆம்! (அப்போது நபி (ஸல்) அவர்கள்) எங்களை (தம்முடன் வாகனத்தில்) ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح