அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "யா அல்லாஹ்! முஹம்மது ஒரு மனிதரே ஆவார். மனிதர்கள் கோபப்படுவதைப் போலவே (சில சமயங்களில்) நானும் கோபப்படுகிறேன். மேலும் நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்துள்ளேன்; அதை நீ மீறமாட்டாய். எந்த ஒரு முஃமினுக்கு நான் (மனித இயல்பு காரணமாக) துன்பம் கொடுத்தாலும், அல்லது சபித்தாலும், அல்லது அடித்தாலும், அதை நீர் அவருக்கு (அவருடைய பாவங்களுக்குப்) பரிகாரமாகவும், மறுமை நாளில் உன்னிடம் அவர் நெருங்குவதற்கான ஒரு காரணமாகவும் ஆக்குவாயாக!"