அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். பின்னர், அஃமஷ் (ரஹ்) வழியாக ஜரீர் (ரஹ்) அறிவித்த ஹதீஸைப் போன்றே (அதாவது, 'வீரத்தைக் காட்டுவதற்காகவும், இனப்பற்றுக்காகவும், முகஸ்துதிக்காகவும் ஒருவர் போரிடுகிறார்; இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?' என்று கேட்டதற்கு, 'அல்லாஹ்வின் மார்க்கமே மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுபவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்பதை) அறிவிப்பாளர் குறிப்பிட்டார்.