அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகழை அல்லாஹ்வை விட அதிகம் விரும்புபவர் எவருமில்லை; இதனால்தான் அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டான். அல்லாஹ்வை விட அதிக ரோஷம் (தன் கட்டளைகள் மீறப்படுவதில் கோபம்) கொண்டவர் எவருமில்லை; இதனால்தான் அருவருக்கத்தக்க செயல்களை (விபச்சாரம் போன்ற பாவங்களை) அவன் தடை செய்துள்ளான்.