அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என அறிவித்தார்கள்:
நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவை புனிதமானதாக அறிவித்து, அதன் குடிமக்களுக்காக (அல்லாஹ்விடம் அருள்வளம் பொழியுமாறு) பிரார்த்தனை செய்தார்கள். மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவை புனிதமானதாக அறிவித்ததைப் போலவே நானும் மதீனாவை புனிதமானதாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவின் குடிமக்களுக்காக செய்த பிரார்த்தனையைப் போன்று இருமடங்காக, நான் (அல்லாஹ்விடம் அவனது அருள்வளம் பொழியுமாறு) அதன் ஸாவிலும் அதன் முத்திலும் (எடை மற்றும் அளவின் இரண்டு திட்ட அளவைகள்) பிரார்த்தனை செய்துள்ளேன்.