இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1917ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ
أَبِي عَلِيٍّ، ثُمَامَةَ بْنِ شُفَىٍّ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ ‏ ‏ وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ
إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ أَلاَ إِنَّ الْقُوَّةَ الرَّمْىُ ‏ ‏
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீது (நின்று), "வ அஇத்தூ லஹும் மஸ்ததஃதும் மின் குவ்வா" ("அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவு பலத்தைத் தயார்ப்படுத்துங்கள்") என்று கூறுவதை நான் கேட்டேன். (மேலும்), "அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக பலம் என்பது வில்வித்தையாகும்; அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக பலம் என்பது வில்வித்தையாகும்; அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக பலம் என்பது வில்வித்தையாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح