ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸில் உள்ளதைப்) போன்றே அறிவிக்கின்றார்கள்.
அபூ ஈஸா (திர்மிதி) கூறுகிறார்: இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்திலுள்ள ஹதீஸாகும். இதனை யஹ்யா பின் அபீ கஸீர் அவர்களும் காஸிம் பின் முஹம்மது அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிறர்களில் உள்ள சில அறிஞர்களின் கருத்து இதுவாகவே உள்ளது. இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாஃபிஈ ஆகியோரும் இதையே கூறுகின்றனர். அதாவது, "பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்திருந்தால், (அதை நிறைவேற்றி) அல்லாஹ்வுக்கு மாறுசெய்யக் கூடாது; அதில் சத்தியத்திற்கான பரிகாரமும் (கஃப்பாரா) இல்லை" என்று அவர்கள் கூறுகின்றனர்.