அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: 'உன்னிடம் இருவர் வழக்குத் தீர்ப்பு கோரி வந்தால், மற்றவரின் வாதத்தைக் கேட்கும் வரை நீ முதலாமவருக்குத் தீர்ப்பளிக்காதே. (இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டால்) எவ்வாறு தீர்ப்பளிப்பது என்பதை நீ அறிந்துகொள்வாய்.'" அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அதற்குப் பிறகு நான் (திறம்பட) நீதிபதியாகவே இருந்து வருகிறேன்."