அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவர் ஒரு சத்தியம் செய்கிறாரோ, அதில் அவர் பாவியாக (பொய் சத்தியம் செய்பவராக) இருக்கும் நிலையில், அதன் மூலம் ஒரு முஸ்லிமின் செல்வத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவர் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது, அவன் அவர் மீது கோபமாக இருப்பான்.”