இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6269ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يُقِيمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَجْلِسِهِ، ثُمَّ يَجْلِسُ فِيهِ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர், மற்றொருவரை அவருடைய இருக்கையிலிருந்து (ஒரு சபையில்) எழுப்பிவிடக்கூடாது, பிறகு (தான்) அதில் அமர்வதற்காக."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2177 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، ح وَحَدَّثَنِي يَحْيَى،
بْنُ حَبِيبٍ حَدَّثَنَا رَوْحٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَحَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، كِلاَهُمَا عَنِ ابْنِ،
جُرَيْجٍ ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، - يَعْنِي ابْنَ عُثْمَانَ
- كُلُّهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ وَلَمْ
يَذْكُرُوا فِي الْحَدِيثِ ‏ ‏ وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا ‏ ‏ ‏.‏ وَزَادَ فِي حَدِيثِ ابْنِ جُرَيْجٍ قُلْتُ فِي
يَوْمِ الْجُمُعَةِ قَالَ فِي يَوْمِ الْجُمُعَةِ وَغَيْرِهَا ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக லைத் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே (மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வாயிலாகவும்) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அவர்கள் அந்த ஹதீஸில், "ஆனால் நீங்கள் நகர்ந்து விரிவாக அமருங்கள்" என்பதைக் குறிப்பிடவில்லை.

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "நான் (நாஃபிஉ), '(இது) வெள்ளிக்கிழமையிலா?' என்று கேட்டேன். அதற்கு அவர் (இப்னு உமர்), 'வெள்ளிக்கிழமையிலும் மற்ற நாட்களிலும் தான்' என்று பதிலளித்தார்கள்" என்பது அதிகமாக இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح