அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இரண்டு பெண் பிள்ளைகளை (சரியான முறையில்) வளர்த்து (பராமரித்து) வருகிறாரோ, அவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்விரண்டையும் போல (நெருக்கமாக) நுழைவோம்." மேலும், அவர்கள் தங்களின் இரண்டு விரல்களால் சைகை செய்தார்கள்.