இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1954 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ
حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ ‏.‏ قَالَ ابْنُ جَعْفَرٍ فِي حَدِيثِهِ وَقَالَ إِنَّهُ لاَ يَنْكَأُ الْعَدُوَّ وَلاَ
يَقْتُلُ الصَّيْدَ وَلَكِنَّهُ يَكْسِرُ السِّنَّ وَيَفْقَأُ الْعَيْنَ ‏.‏ وَقَالَ ابْنُ مَهْدِيٍّ إِنَّهَا لاَ تَنْكَأُ الْعَدُوَّ ‏.‏ وَلَمْ
يَذْكُرْ تَفْقَأُ الْعَيْنَ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களைச் சுண்டி எறிவதைத் தடை செய்தார்கள்.

இப்னு ஜஃபர் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், "(ஏனெனில்,) அது எதிரியைக் காயப்படுத்தாது; வேட்டைப் பிராணியைக் கொல்லாது. மாறாக, அது பல்லை உடைக்கும்; கண்ணைக் குருடாக்கும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)" எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு மஹ்தீ (ரஹ்) அவர்கள், "அது எதிரியைக் காயப்படுத்தாது" என்று கூறினார்கள்; "கண்ணைக் குருடாக்கும்" என்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح