இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஒருவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து அவரை எழுப்பிவிட்டு, அவ்விடத்தில் மற்றொருவர் அமர்வதை தடைசெய்தார்கள். மாறாக, "(ஒருவருக்கொருவர்) இடமளித்து, விசாலமாக்கிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள், ஒருவர் தம்முடைய இடத்திலிருந்து எழுந்த பின், (மற்றொருவர்) அவ்விடத்தில் அமர்வதை வெறுப்பவர்களாக இருந்தார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: உங்களில் எவரும் மற்றொருவரை (அவரது) சபையில் எழுப்பிவிட்டு, பின்னர் அவரது இடத்தில் அமர வேண்டாம்.