உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'யார் முறையாக உளூச் செய்து, பிறகு கடமையான தொழுகைக்காக நடந்து சென்று, மக்களுடன் அல்லது ஜமாஅத்துடன் அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ, அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுகிறான்.'"