அப்துல்லாஹ் இப்னு ஸைத் பின் ஆஸிம் அல்மாஸினீ (ரழி) அவர்கள், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதாகக் குறிப்பிட்டு, அன்னாரின் அங்கசுத்தியை (உளூவை) விவரித்துக் கூறியதாவது:
"அவர்கள் (நபி (ஸல்)) தம் கைகளில் எஞ்சியிருந்த தண்ணீரை அல்லாத (புதிய) தண்ணீரைக் கொண்டு தம் தலையைத் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்). மேலும், தம் இரு கால்களையும் அவை தூய்மையாகும் வரை கழுவினார்கள்."