அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எதன் மூலம் அல்லாஹ் உங்கள் பாவங்களை அழித்து, உங்கள் அந்தஸ்துகளை உயர்த்துவானோ அதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" அதற்கு அவர்கள், "ஆம் அல்லாஹ்வின் தூதரே (ஸல்)!" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "சிரமமான நேரங்களிலும் உளூவைச் செவ்வனே செய்வதும், மஸ்ஜித்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைப்பதும், ஒரு தொழுகைக்குப் பின் மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பதும் ஆகும். அதுவே ரிபாத் ஆகும்."
அபூ ஸயீத் குத்ரீ (ரழி) அவர்கள் செவியுற்றதாக அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எதன் மூலம் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, நன்மைகளை அதிகப்படுத்துவானோ அக்காரியத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள். அவர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சிரமங்கள் இருந்தபோதிலும் வுளூவை முழுமையாகச் செய்வதும், மஸ்ஜிதுகளை நோக்கி எடுத்துவைக்கும் அடிகளை அதிகப்படுத்துவதும், ஒரு தொழுகைக்குப் பிறகு அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பதும் ஆகும்."
الخامس عشر: عنه قال رسول الله صلى الله عليه وسلم: " ألا أدلكم على ما يمحو الله به الخطايا، ويرفع به الدرجات؟" قالوا: بلى يا رسول الله، قال: " إسباغ الوضوء على المكاره، وكثرة الخطا إلى المساجد، وانتظار الصلاة بعد الصلاة، فذلكم الرباط" ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் எதன் மூலம் பாவங்களை அழித்து, (உங்கள்) தகுதிகளை உயர்த்துகிறானோ அதனை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே" என்றார்கள். அவர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சிரமமான நேரங்களிலும் வுழூவை முறையாகச் செய்வது, பள்ளிவாசல்களுக்கு அடிக்கடி செல்வது, ஒரு ஸலாத் (தொழுகை) முடிந்த பிறகு அடுத்த ஸலாத்திற்காக ஆவலுடன் காத்திருப்பது; நிச்சயமாக, அதுவே அர்-ரிபாத் ஆகும்".
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "ألا أدلكم على ما يمحو الله به الخطايا، ويرفع به الدرجات؟ " قالوا بلى يا رسول الله. قال: "إسباغ الوضوء على المكاره، وكثرة الخطا إلى المساجد، وانتظار الصلاة بعد الصلاة، فذلكم الرباط، فذلكم الرباط" ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அழித்து, தகுதிகளை (சுவர்க்கத்தில்) உயர்த்துகிறானோ அதை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?" அதற்கு நபித்தோழர்கள் (ரழி) அவர்கள், "ஆம் (எங்களுக்கு அறிவியுங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள், "சிரமமான சூழ்நிலைகளிலும் வுழூவை முழுமையாகச் செய்வது, பள்ளிவாசலுக்கு அதிகமான அடிகளை எடுத்து வைத்துச் செல்வது, ஒரு ஸலாத் (தொழுகை) தொழுத பின்னர் அடுத்த ஸலாத்துக்காகக் காத்திருப்பது; அதுவே அர்-ரிபாத் ஆகும், அதுவே அர்-ரிபாத் ஆகும்."