இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை (முழுமையாக) வளரவிடுங்கள்; மீசைகளை (மிகவும்) ஒட்ட நறுக்குங்கள் (அல்லது மழிக்கவும்).''
இப்னு உமர் (ரழி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போதெல்லாம், தமது தாடியைத் (தமது) கையால் பிடித்துக் கொள்வார்கள். (கைப்பிடிக்கு) மிஞ்சியதை (கத்தரித்து) எடுத்துவிடுவார்கள்.