உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“முஅத்தின் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறும்போது, உங்களில் ஒருவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறி; பிறகு அவர் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறும்போது, அவரும் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறி; பிறகு அவர் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்’ என்று கூறும்போது, அவரும் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்’ என்று கூறி; பிறகு அவர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று கூறும்போது, அவர் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று கூறி; பிறகு அவர் ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும்போது, அவர் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ என்று கூறி; பிறகு அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறும்போது, அவரும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறி; பிறகு அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறும்போது, அவரும் தம் உள்ளத்திலிருந்து ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறினால், அவர் சொர்க்கத்தில் நுழைவார்.”