حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَأَلْتُ مَسْرُوقًا مَنْ آذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ. فَقَالَ حَدَّثَنِي أَبُوكَ ـ يَعْنِي عَبْدَ اللَّهِ ـ أَنَّهُ آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ.
மஅன் இப்னு அப்துர்-ரஹ்மான் அவர்கள் அறிவித்தார்கள்: 'நான் என் தந்தை (அப்துர்-ரஹ்மான்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'நான் மஸ்ரூக் அவர்களிடம், 'குர்ஆனை ஜின்கள் செவியுற்ற அந்த இரவில், நபி (ஸல்) அவர்களுக்கு ஜின்களைப் பற்றி அறிவித்தது யார்?' என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் அவர்கள், 'உம்முடைய தந்தை (அதாவது, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)) எனக்கு அறிவித்தார்கள்: 'ஒரு மரம் நபி (ஸல்) அவர்களுக்கு ஜின்களைப் பற்றி அறிவித்தது' என்று கூறினார்கள்.'