அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: லுஹர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும், (அப்போது) ஒருவர் அல்-பகீஃ சென்று, தனது இயற்கைக்கடனை முடித்து, உளூ செய்து, (பள்ளிவாசலுக்கு) வருவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் இருப்பார்கள், அதை அவர்கள் நீளமாக்குவார்கள்.