حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ يَزِيدَ، عَنْ قَزَعَةَ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ لَيْسَ لَكَ فِي ذَلِكَ خَيْرٌ . قُلْتُ بَيِّنْ رَحِمَكَ اللَّهُ . قَالَ كَانَتِ الصَّلاَةُ تُقَامُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الظُّهْرَ فَيَخْرُجُ أَحَدُنَا إِلَى الْبَقِيعِ فَيَقْضِي حَاجَتَهُ وَيَجِيءُ فَيَتَوَضَّأُ فَيَجِدُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الرَّكْعَةِ الأُولَى مِنَ الظُّهْرِ .
கஸஆ அவர்கள் கூறியதாவது:
“நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதில் உமக்கு எந்த நன்மையும் இல்லை’* என்றார்கள். நான், ‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும், அதை எனக்கு விளக்குங்கள்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். பிறகு எங்களில் ஒருவர் அல்-பகீஃக்குச் சென்று, தமது இயற்கைக்கடனை முடித்துவிட்டு, திரும்பி வந்து உளூ செய்துவிட்டுப் பார்த்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹருடைய முதல் ரக்அத்திலேயே இருப்பார்கள்’ என்றார்கள்.”