இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

816சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ قُطْبَةَ بْنِ مَالِكٍ، سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي الصُّبْحِ ‏{وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ }‏ ‏.‏
குத்பா இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆனின் 50வது அத்தியாயமான காஃப் அத்தியாயத்தின் 10வது வசனமான) 'வந்நக்ல பாஸிகாத்தின் லஹா தல்உன் நளீத்' (பொருள்: மேலும், குலைகள் அடுக்கு அடுக்காக உள்ள உயரமான பேரீச்சை மரங்களையும்) என்று ஓதுவதைச் செவியுற்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)