அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர், நபி (ஸல்) அவர்களின் குளியல் (முறை) குறித்து அவர்களிடம் கேட்டார்.
உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் சுமார் ஒரு 'ஸாஉ' அளவு தண்ணீர் கொண்ட பாத்திரத்தைக் கொண்டுவரச் செய்து, (நபி (ஸல்) அவர்கள் குளித்த முறையை விளக்கும் விதமாக) குளித்தார்கள்; (தண்ணீரைத்) தம் தலையில் ஊற்றிக்கொண்டார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு திரை இருந்தது.
அபூஅப்துல்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன்: யஸீத் பின் ஹாரூன் (ரஹ்), பஹ்ஸ் (ரஹ்), அல்ஜுத்தீ (ரஹ்) ஆகியோர் ஷுஅபா (ரஹ்) வழியாக (அறிவிக்கையில்) "ஒரு ஸாஉ அளவு" என்று குறிப்பிட்டுள்ளனர்.
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ أَنَا وَأَخُوهَا، مِنَ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِيِّ، صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلاَثًا . قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ .
அபூ ஸலமா பின் அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிவித்தார்கள்:
நானும் ஆயிஷா (ரழி) அவர்களின் பால்குடிச் சகோதரரும் அவர்களிடம் சென்றோம். அவர் (பால்குடிச் சகோதரர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஜனாபத் (தாம்பத்திய உறவு காரணமான) குளியலைப் பற்றிக் கேட்டார். அவர்கள் ஒரு ’ஸா’ அளவுள்ள (நீர் கொண்ட) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்; அவர்கள் குளித்தார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது. அவர்கள் தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள்.
மேலும் அவர் (அபூ ஸலமா) கூறினார்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், தங்கள் தலைமுடி காதுகள் வரை இருக்கும் அளவுக்கு அதை(ச் சிறிதாக)க் கத்தரித்துக்கொள்வார்கள்."