இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, சூரியன் உதிக்கும் வரை (சுப்ஹுத்) தொழுகையை (விட்டு) உறங்கிவிட்டார்கள். (விழித்த) பின்பு, அவர்கள் பிலால் (ரழி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் பாங்கு சொன்னார்; (பிறகு) நபியவர்கள் (சுப்ஹுடைய முன்சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர், சூரியன் (வெப்பம் உறைக்கும் அளவுக்கு) நன்றாக மேலே உயரும் வரை காத்திருந்தார்கள். பிறகு (மீண்டும் பிலால் ரழி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் இகாமத் சொன்னார்; பின்பு நபியவர்கள் அவர்களுக்கு (சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்தாக) நடத்தினார்கள்.