أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ .
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும்போதும், ருகூஃவுக்குச் செல்லும்போதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போதும், தமது தோள்களுக்கு இணையாக வரும்வரை தமது கைகளை உயர்த்துவதைக் கண்டேன்."
ஸாலிம் அவர்கள் தனது தந்தை (இப்னு உமர்) (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கும்போது தமது தோள்களுக்கு நேராகத் தமது கைகளை உயர்த்துவதைக் கண்டேன். அவர்கள் ருகூஃவுக்குச் செல்ல நாடும்போதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்திய பிறகும் (அவ்வாறே கைகளை) உயர்த்துவார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அவர்கள் ஒருமுறை, "அவர்கள் தமது தலையை உயர்த்தியபோது:" என்றும், (பெரும்பாலான சமயங்களில்) "ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது" என்றும் கூறுவார்கள். அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் (தமது கைகளை) உயர்த்த மாட்டார்கள்.
ஸாலிம் அவர்கள், தம் தந்தை (இப்னு உமர்) (ரழி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக அறிவித்தார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தமது இரு கைகளையும் தமது தோள்புஜங்கள் அளவிற்கு உயர்த்துவதையும், (மீண்டும்) அவர்கள் ருகூஃ செய்யும்போது (அவ்வாறே கைகளை உயர்த்துவதையும்), மேலும் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது (அவ்வாறே கைகளை உயர்த்துவதையும்) கண்டேன்.”
இப்னு அபீ உமர் அவர்கள் தமது அறிவிப்பில் கூடுதலாகக் கூறினார்கள்: “மேலும், அவர்கள் (ஸல்) இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் கைகளை உயர்த்த மாட்டார்கள்.”