அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் வந்தேன். அவர்கள் அழுததன் காரணமாக, அவர்களுடைய உள்ளிருந்து (நெஞ்சிலிருந்து) கொதிக்கும் பானையின் சத்தத்தைப் போன்ற ஒரு சத்தம் வந்து கொண்டிருந்தது.