இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

24324முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا يَعْلَى حَدَّثَنَا قُدَامَةُ يَعْنِي ابْنَ عَبْدِ اللهِ الْعَامِرِيَّ عَنْ جَسْرَةَ قَالَتْ حَدَّثَتْنِي عَائِشَةُ قَالَتْ دَخَلَتْ عَلَيَّ امْرَأَةٌ مِنَ الْيَهُودِ فَقَالَتْ إِنَّ عَذَابَ الْقَبْرِ مِنَ الْبَوْلِ فَقُلْتُ كَذَبْتِ فَقَالَتْ بَلَى إِنَّا لَنَقْرِضُ مِنْهُ الثَّوْبَ وَالْجِلْدَ فَخَرَجَ رَسُولُ اللهِ ﷺ إِلَى الصَّلَاةِ وَقَدْ ارْتَفَعَتْ أَصْوَاتُنَا فَقَالَ مَا هَذِهِ؟ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَتْ فَقَالَ صَدَقَتْ قَالَتْ فَمَا صَلَّى رَسُولُ اللهِ ﷺ مِنْ يَوْمِئِذٍ إِلَّا قَالَ فِي دُبُرِ الصَّلَاةِ اللهُمَّ رَبَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ أَعِذْنِي مِنْ حَرِّ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் ஒரு யூதப் பெண் வந்தாள். அவள், "நிச்சயமாக கப்ருடைய (மண்ணறை) வேதனை சிறுநீரின் (காரணமாகவே) ஏற்படுகிறது" என்று கூறினாள். நான், "நீ பொய் சொல்கிறாய்" என்றேன். அதற்கவள், "இல்லை (அது உண்மைதான்), நிச்சயமாக நாங்கள் அதற்காக (சிறுநீர் பட்ட) ஆடையையும் தோலையும் கூட வெட்டி (எறிந்து) விடுகிறோம்" என்று கூறினாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். (அந்நேரம் விவாதத்தினால்) எங்களது குரல்கள் உயர்ந்திருந்தன. அவர்கள், "என்ன இது (சத்தம்)?" என்று கேட்டார்கள். அவள் கூறியதை நான் அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபியவர்கள், "அவள் உண்மையையே கூறினாள்" என்றார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: அன்றிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையைத் தொழுதாலும் அதன் முடிவில் (அத்தஹிய்யாத்தின் இறுதியில்), "அல்லாஹும்ம ரப்ப ஜிப்ரீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல அஇத்னீ மின் ஹர்ரின் நாரி வ அதாபில் கப்ரி" (பொருள்: யா அல்லாஹ்! ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவனே! நரகத்தின் வெப்பத்திலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் எனக்குப் பாதுகாப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திக்காமல் இருந்ததில்லை.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ளயீஃப் (இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது)
إسناده ضعيف