حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، قَالَ رَأَيْتُ أَبَا كَاهِلٍ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ فَحَدَّثَنِي أَخِي، عَنْهُ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ عَلَى نَاقَةٍ وَحَبَشِيٌّ آخِذٌ بِخِطَامِهَا .
அபூ காஹில் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் ஒட்டகத்தின் மீதிருந்தவாறு உரையாற்றிக் கொண்டிருக்க, ஓர் அபிசீனியர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ عَائِذٍ، - هُوَ أَبُو كَاهِلٍ - قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ عَلَى نَاقَةٍ حَسْنَاءَ وَحَبَشِيٌّ آخِذٌ بِخِطَامِهَا .
அபூ காஹில் எனப்படும் கைஸ் இப்னு ஆயித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய பெண் ஒட்டகத்தின் மீது உரை நிகழ்த்திக் கொண்டிருக்க, ஒரு அபிசீனியர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.”