இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கஅபா) இல்லத்தின் மூலைகளில் கருப்பு மூலையையும் (ஹஜருல் அஸ்வத்), ஜுமுஹி கோத்திரத்தாரின் வீடுகளுக்கு நேராக அதைத் தொடர்ந்துள்ள மூலையையும் (ருக்னுல் யமானி) தவிர வேறு எதையும் (தமது கையால்) தொடமாட்டார்கள்.
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ، لَهُ عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا .
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தலைமுடி பிசின் பூசப்பட்ட நிலையில் (தூசு படியாமல், கலைந்துவிடாமல் இருக்க) இஹ்ராம் அணிந்ததைக் கண்டேன்.