ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஒரு படுக்கை ஆணுக்கு; ஒரு படுக்கை அவனது மனைவிக்கு; மூன்றாவது விருந்தினருக்கு; நான்காவது ஷைத்தானுக்குரியது (அதாவது, தேவைக்கு அதிகமான படுக்கைகள் வீண்விரயமும், உலகப் பற்றுதலும் ஆகும்)" என்று கூறினார்கள்.