அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், "நான் எனது நாயை (வேட்டைக்காக) அனுப்புகிறேன். (அங்கு வேட்டையாடப்பட்ட) ஒரு பிராணியுடன் எனது நாயையும், மற்றொரு நாயையும் காண்கிறேன். (அந்தப் பிராணியை) அவ்விரண்டில் எது பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீர் உமது நாயின் மீதுதான் (வேட்டைக்கு அனுப்பும் போது அல்லாஹ்வின்) பெயரைச் சொன்னீரே தவிர, மற்றொன்றின் மீது (அல்லாஹ்வின் பெயரைச்) சொல்லவில்லை" என்று கூறினார்கள்.