அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் அல்லது அஸர் தொழுதார்கள். இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். (அப்போது) துஷ் ஷிமாலைன் பின் அம்ர் என்பவர் அவரிடம், 'தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'துல் யதைன் என்ன கூறுகிறார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அவர் உண்மையையே கூறுகிறார்' என்று பதிலளித்தார்கள். எனவே, குறைந்த அந்த இரண்டு ரக்அத்களை நபி (ஸல்) அவர்கள் அவர்களுடன் தொழுது நிறைவு செய்தார்கள்."