ஸாலிம் அவர்கள், அவர்களுடைய தந்தை (ரழி) கூறினார்கள் என அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் அவசரமாக இருந்தபோது மஃரிப் மற்றும் இஷா தொழுகைகளைச் சேர்த்து தொழுவதை கண்டேன்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘வானம் பிளக்கப்படும் போது’ மற்றும் ‘உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!’ (ஆகியவை) ஓதப்பட்டபோது ஸஜ்தாச் செய்தேன்."
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي { إِذَا السَّمَاءُ انْشَقَّتْ } وَ { اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ } .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “வானம் பிளக்கப்படும் போது” (என்ற அத்தியாயத்திலும்), “படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக” (என்ற அத்தியாயத்திலும்) சஜ்தா செய்தோம்.
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي (اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ) وَ (إِذََا السَّمَاءُ انْشَقَّتْ )
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன், 'உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!' மற்றும் 'வானம் பிளக்கும் போது' ஆகிய அத்தியாயங்களில் ஸஜ்தா செய்தோம்."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي {إِذَا السَّمَاءُ انْشَقَّتْ} وَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ}
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “வானம் பிளக்கப்படும் பொழுது” 84:1 மற்றும் “உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!” 96:1 ஆகிய அத்தியாயங்களில் ஸஜ்தா செய்தோம்.”