கப்பாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சுட்டெரிக்கும்) மணலின் வெப்பம் குறித்து முறையிட்டோம். ஆனால் அவர்கள் எங்கள் புகாரை ஏற்கவில்லை."
அபூ இஸ்ஹாக் அவர்களிடம், "(தொழுகையை) விரைவுபடுத்துவது குறித்தா?" என்று கேட்கப்பட்டது. அவர் "ஆம்" என்று கூறினார்.